தொடர்புடைய செய்திகள்
- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. எத்தனை பேர் தேர்ச்சி?
- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.!
- டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரங்கள்..!
- மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு விண்ணப்பம்.. என்ன செய்ய போகிறது தமிழக அரசு?
- டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.! புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதி.!!
குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 6,224 காலி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்திய நிலையில் இந்த தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் 432 மையங்களில் இந்த தேர்வு நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html என்ற இணையதள பக்கத்தில் இந்த தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Edited by Siva
