ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:02 IST)

டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரங்கள்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

105 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும் செப்டம்பர் 28ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விண்ணப்பம் தொடர்பான விவரங்கள் விண்ணப்பம் செய்ய கடைசி தேதி மற்றும் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran