வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (11:01 IST)

குரூப் 4 இளநிலை உதவியாளர் பணி.. கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு..!

tnpsc
குரூப் 4 இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அமைச்சுப்பணி பள்ளிக்‌ கல்வித்துறை. இளநிஸை உதவியாளர்‌ நியமனம் குறித்த அறிவிப்பில்  தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்தேர்வாணையக்குழு  தேர்வு 24.07.2022 அண்று நடைபெற்றது. இந்த தேர்வில்  தேர்ச்சி பெற்று தேர்வாணையம்‌ மூலம்‌ தெரிவு செய்யப்பட்டவர்களுக்குக்‌ கலந்தாய்வு நடத்தி
நியமன ஆணை வழங்க்கப்படவுள்ளது.
 
தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலம்‌ இளநிலை உதவியாளர்‌ பணிக்குத்‌ தெரிவு செய்யப்பட்டு பள்ளிக்‌ கல்வித்‌ துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673. இளநிலை உதவியாளர்‌ பணிக்கு வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva