தொடர்புடைய செய்திகள்
- 3ம் சுற்று கலந்தாய்வு முடிந்தும் 50,000 இடங்கள் காலி.. 1 மாணவர் கூட சேராத கல்லூரிகள் இத்தனையா?
- 11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு.. முடிவுகள் இன்று வெளியீடு..!
- தடகள போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற கல்லூரி மாணவிகள்
- கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது: கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு..!
- 8 ஆண்டுகளுக்கு மேல் எம்பிபிஎஸ் முடிக்காத மாணவர்கள்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
இன்று முதல் பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு.. மாணவர்களே தயாரா?
பொறியியல் படிப்புகளுக்கான மூன்று கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்று முதல் துணை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4585 மாணவர்களில் 4446 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக இருந்தது குறிப்பிடத்தக்கது
பொது பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
