திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:48 IST)

மீசையை முறுக்குனா பயந்துடுவோமா? – பாலகிருஷ்ணாவுக்கு ரோஜா பதிலடி!

நேற்று ஆந்திர சட்டமன்றத்தில் நடிகரும், எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணா நடந்து கொண்ட விதம் குறித்து நடிகையும், அமைச்சருமான ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.



ஆந்திராவில் நேற்று சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டு சட்டமன்றத்தில் அமளியை ஏற்படுத்தினர். அப்போது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏவும், பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா சட்டமன்றத்தில் தொடையை தட்டி மீசையை முறுக்கி ஆக்ரோஷமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சரும், நடிகையுமான ரோஜா “தெலுங்கு தேசம் கட்சியில் 23 எம்.எல்.ஏக்கள் மட்டுமே. ஆனால் நாங்கள் 151 பேர். எங்களை மதிக்கவில்லை என்றால் உங்கள் நிலை என்னவாகும் என யோசியுங்கள்.

நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் பயப்பட மாட்டோம். 2 முறை எம்.எல்.ஏவான பாலகிருஷ்ணா இதுவரை தொகுதி மக்களுக்காக எதையும் பேசியதில்லை. பெண்களை இழிவாக பேசும் வழக்கம் கொண்டவர் அவர்” என விமர்சித்துள்ளார்.

Edit by Prasanth.K