1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (18:05 IST)

குரூப் 4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சற்று முன் வெளியிட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த செய்திகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
 
இந்த கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளதை அடுத்து கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது