செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (11:31 IST)

11 மாவட்ட கல்வி அதிகாரி பணி.. வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்.. நேர்முகத் தேர்வு எப்போது?

tnpsc
11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சமீபத்தில் குரூப்-1 தேர்வு வைக்கப்பட்ட நிலையில் அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி மூலம் அவ்வப்போது தமிழக அரசில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்பதும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை ஏராளமான பணியிடங்களுக்கு அவ்வப்போது தேர்வுகள் வைக்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் 11 மாவட்ட கல்வி அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சமீபத்தில் அறிவிப்பு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதற்கான தேர்வு நடைபெற்றது என்பது ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாகவும் நேர்முக தேர்வு குறித்த அறிவிப்பு தனித்தனியாக விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran