வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (13:07 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; எப்போது விண்ணப்பிக்கலாம்?

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வுக்கு இன்று அதாவது மார்ச் 28 முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
 
குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  பணிகளின் விபரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  அனைத்து பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச வயது 21 எனவும், அதிகபட்ச வயது 34 எனவும் இருக்க வேண்டும்.  எம்பிசி, டிசி, பிசி முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி தேர்வாளர்களுக்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த கைம்பெண்களுக்கும் 39 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று  முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி இரவு 11.59 வரை அவகாசம் உண்டு. ஜூலை 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 வரை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.
 
Edited by Mahendran