1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police arrested reporter mukthar in karnataka

கர்நாடகாவில் பதுங்கியிருந்த செய்தியாளர் முக்தார் கைது!.. தமிழக போலீசார் அதிரடி!..

mukthar
செய்தியாளர் என்கிற பேரில் பேட்டி கொடுக்க வந்தவர்களிடன் சொந்த விஷயத்தை கூட  கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கேள்விகளாக கேட்டு முகம் சுளிக்க வைப்பவர்தான் முக்தார். இவரிடம் பேட்டிக்கு போன பல பிரபலங்களும் கசப்பான அனுபவத்தையே சந்தித்தார்கள்.

சில நாட்களுக்கு முன்பு பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவை முக்தார் பேட்டி எடுத்தார். அப்போது தமிழக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளராக இருக்கும் அலிசா அப்துல்லா பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளால் இருவரும் விமர்சித்தனர்..
 
அலிஷா அப்துல்லா தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அலிசாவின் இரண்டு குழந்தைகளில் ஒன்று அண்ணாமலையை போலவே இருக்கிறது என்று முத்தாரும், திருச்சி சிவாவும் மிகவும் மோசமாக பேசினார்கள்.
 
இதையடுத்து கண்ணீர் மல்க அலிசா அப்துல்லா காவல் ஆணையைடம் புகார் அளித்தார். எனவே, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்தனர். ஆனால் முக்தார் தலைமறைவானார். கடந்த சில நாட்களாகவே தமிழக போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் பதுங்கியிருந்த முத்தாரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
இப்ப சொல்ல முடியாது!.. அறிவிப்பிலிருந்து பின் வாங்கிய ராகவா லாரன்ஸ்!..