1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Identical X Posts by Annamalai and Vanathi Srinivasan Spark 'Copy-Paste' Controversy on Social Media

அதெப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி போஸ்ட் போடுவாங்க.. அண்ணாமலை இன்னும் பாஜகவில் தான் இருக்கின்றாரா?

பாஜக காப்பி பேஸ்ட் சர்ச்சை
பாஜகவில் இருந்து விலகியதாக கூறப்பட்ட அண்ணாமலை மற்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகிய இரு முக்கிய தலைவர்களும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் ஒரே மாதிரியான வாசகங்களை கொண்ட பதிவை வெளியிட்டுள்ளது தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து சில குறிப்பிட்ட செய்தி தொலைக்காட்சிகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த இரு பதிவுகளும் அமைந்துள்ளன. 
 
மினவெட்டு மற்றும் தவெக அரசின் நிர்வாக திறனின்மை குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்ததால், பழிவாங்கும் நோக்கில் இந்த ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இருவருமே தங்களது பதிவுகளில் துல்லியமாக ஒரே வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியுள்ளனர்.
 
பாஜகவின் ஐடி விங் தயார் செய்து கொடுத்த அறிக்கையை இரு தலைவர்களும் அப்படியே 'காப்பி பேஸ்ட்' செய்ததே இந்த ஒரே மாதிரியான பதிவுக்கு காரணம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், அண்ணாமலை இன்னும் பாஜகவில்தான் இருக்கிறாரா என்ற கேள்விகளுக்கு, வானதி சீனிவாசனுடன் இணைந்து ஒரே அலைவரிசையில் அவர் பதிவிட்டிருப்பது, அவர் இன்னும் பாஜகவின் அதிகாரப்பூர்வ குரலாகவே செயல்பட்டு வருகிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. 
 
எவ்வாறாயினும், இரு மூத்த தலைவர்களின் பக்கங்களில் புள்ளி, கமா மாறாமல் ஒரே மாதிரியான விமர்சனம் வெளியானது தற்பொழுது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கர்நாடகாவில் பதுங்கியிருந்த செய்தியாளர் முக்தார் கைது!.. தமிழக போலீசார் அதிரடி!..