மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை - தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது
சமீபத்தில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 10 கிலோவுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
. 15 நாட்களுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் நிஷாந்த் என்கிற நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதோடு பிரபல யுடியூபர் மற்றும் இன்ஃபுளூயன்சர் மினாட்சி இந்த விஷயத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது..
போலீசாரின் விசாரணையில் நிஷாந்த் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதையும், அதற்கு தான் உதவி செய்ததையும் மீனாட்சி ஒப்புக்கொண்டார்., மேலும் அவர் காட்டிய இடத்திலிருந்து 5 கிலோ நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் நிஷாந்த் போலீசாரிடம் சிக்கவில்லை. அதேநேரம் நகைகளை பதுக்கி வைக்க உதவி செய்த நிஷாந்தின் தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரின் தாயாரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்..
நிசாந்த் மும்பை, கேரளா, ஹைதராபாத் என பல ஊர்களுக்கு மாறி மாறி சென்றதால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவரின் செல்போன் சிக்னலை வைத்து அவரை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் தேசம்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த நிஷாந்தை சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்..