1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (11:35 IST)

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா?

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்பிக்கள் குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்கின்றனர்.

 
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் தொர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று தமிழக எம்பிக்கள் குழு  சந்திக்கிறது. நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மனு அளிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.