1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (11:24 IST)

யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி கிடையாது ??

யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி கிடையாது என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

 
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, 5 சவரனுக்குள் வாங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதும் அதனை அடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கான நடைமுறைகள் ஆரம்பம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைகடன் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48.84 லட்சம் பேர் என்றும் அதில் 35.37 லட்சம் பேர் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி இல்லாதவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 75% பேர் அதற்கு தகுதி இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி கிடையாது என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 
1. 2021 ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
2. நகைக் கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
3. 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
4. அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படாது.
5. கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது.
6. ஆதார் எண்ணைத் தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.