திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (11:16 IST)

கிணற்றில் கிடந்த 750 சவரன் நகைகள்! புதுக்கோட்டை வழக்கில் திருப்பம்!

புதுக்கோட்டையில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 750 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வ்ழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். திருடப்பட்ட நகை குறித்து பல்வேறு தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் நகைகள் கிடந்தது தெரிய வந்துள்ளது. கிணற்றில் உள்ள தண்ணீரை இறைத்து மூட்டையில் கட்டி போடப்பட்டிருந்த நகைகளை போலீஸார் மீட்டு எடுத்துள்ளனர். நகைகளை கிணற்றில் மறைத்து வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.