1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu omicron spread affect in new year celebration

புத்தாண்டிற்கு கோவில்களில் அனுமதி உண்டா? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

Tamilnadu
ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில் புத்தாண்டிற்கு கோவில்களில் அனுமதிப்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் அறிகுறிகளும், பாதிப்புகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒமிக்ரான் சமூக பரவலாக மாறியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டிற்கு மக்கள் கூட அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டிற்கு மக்கள் பலரும் கோவில்களுக்கு செல்வர் என்பதால் கோவில்களிலும் அனுமதி மறுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பை வெளியிடுவார் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அதிகரிக்கும் ஒமிக்ரான்; தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுமதி! – ஜோ பைடன் அறிவிப்பு!