செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (12:38 IST)

அக்டோபரில் சட்டமன்ற கூட்டம்.. தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு..!

அக்டோபரில் சட்டமன்ற கூட்டம்.. தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு..!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். 
 
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். அன்றைய தினம், மறைந்த வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உட்பட எட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
 
அதன்பின் 2025-26ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான துணை மானிய கோரிக்கை பேரவையில் அளிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
 
 கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அக்டோபர் 14-ஆம் தேதிக்கு முன்னதாக ஒரு நாள் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அறிவிக்கப்படும் என அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவை விதி 26(1)-ன் கீழ் இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
 
 
Edited by Mahendran