திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (20:32 IST)

மருத்துவர்கள் பணிக்கு வராவிட்டால் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு தரப்பினர்களும் மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பினர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை
 
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியபோது, ‘அமைச்சர் விஜயபாஸ்கர் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரும் எங்கள் போராட்டம் தொடரும் என்றும், மருத்துவர்களின் போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டாம் என்றும்  அறிவித்துள்ளனர். இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த போராட்டம் தொடரும் என்று அஞ்சப்படுகிறது 
 
இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் பலர் அவதியுற்று உள்ளதால் அரசு தற்போது ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு நாளையும் பணிக்கு வராவிட்டால் பிரேக்கிங் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகும் பணிக்கு வராத மருத்துவர்களின் பணியிடங்கள் காலி இடமாக கருதப்பட்டு, புதியதாக மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த எச்சரிக்கைக்கு பணிந்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவார்களா? அல்லது போராட்டம் நீடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்