புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (06:18 IST)

தோல்வியில் முடிந்த 80 மணி நேரப் போராட்டம்! சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல்!

கடந்த வெள்ளியன்று நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்க கடந்த 80 மணி நேரமாக நடந்த மீட்புப்போராட்டம் தோல்வியில் முடிந்தது
 
இன்று அதிகாலை 2 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து சுஜித் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து அதன்பின் சுஜித்தின் உடலை இரண்டு மணி நேரம் போராடி தேசிய மீட்புப்படையினர் மீட்டனர்.
 
சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது மருத்துவர் குழு ஒன்றால் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின் சுஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அதன்பின் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. மருத்துவமனையில் சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது