செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (12:04 IST)

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி - தமிழக அரசு புது முயற்சி!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 

 
கடந்த சில காலமாக தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் மற்றும் அது தொடர்பான தற்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இதனால் பள்ளி மாணவர்கள், மாணவிகள் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் காலங்களில் அந்த எண்களை பள்ளி பாட புத்தகத்திலேயே அச்சிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழக அரசு பக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
இதனிடையே தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.