1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ajithukumar give fund to CM for Corona relief

தாராளமாக நிதி வழங்க முதல்வர் கோரிக்கை! – 25 லட்சம் நிதி வழங்கிய அஜித்குமார்!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில் நடிகர் அஜித்குமார் நிதி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வரும் நிலையில் திரைப்பிரபலங்களும் நிதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார். எனினும் அரசு குறிப்பில் ரூ.2.5 கோடி என குறிப்பிடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்ட நிலையில் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா 25 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
நம்ம மேல நம்பிக்கை வைத்தவர்களுக்கு உதவ வேண்டும்! – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!