ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (10:01 IST)

மு.க.ஸ்டாலின் பெயர், புகைப்படம் இல்லாத நிவாரண பை! – எளிமையில் கவர்கிறாரா புதிய முதல்வர்?

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக பணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் நிலையில் அதற்கான பையில் முதல்வர் பெயர், படம் உள்ளிட்டவை இடம்பெறவில்லை.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னதாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நாளை முதல் ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிவாரண பையில் முதல்வரின் பெயரோ, புகைப்படமோ இடம்பெறவில்லை. கொரொனா தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம் என்ற வாசகத்தின் கீழும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் என்றே இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் முந்தைய ஆட்சியில் அரசின் திட்டங்களை தனிநபர் சாதனையாக வெளிக்காட்டும் விளம்பர யுத்தியை தவிர்ப்பதாகவும், மக்களுக்கு இவ்வாறான புகைப்பட விளம்பரங்கள் விருப்பமில்லாதது என்பதால் எளிமையான முறையில் அவர்களை அணுகும் வழி இது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.