செவ்வாய், 23 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (11:21 IST)

ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் எம்.எல்.ஏக்கள்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் எம்.எல்.ஏக்கள்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளத்தை திமுக எம்.எல்.ஏக்கள் வழங்குவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனா நிவாரண நிதிக்கு பாமக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேலும் பல கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் மாத ஊதியத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.