செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:40 IST)

தமிழக பட்ஜெட் 2020: Live Updates!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது... 
 
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.... 
 
- சுமார் ரூ,21,000 கோடி அளவிற்கு வருவாய் பற்றாக்குறை
 
- 2021-2022 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்
 
- தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி
 
- தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் நிலுவைக்கடன் 21.83 சதவீதம்
 
- தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடி
 
- தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு
 
- உணவு மாணியத்துக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு
 
- கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கீடு
 
- சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு
 
- மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு
 
- நீரை சிக்கனமாக பயன்படுத்த திருத்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்ச ஏக்கராக விரிவுப்படுத்தப்படும்
 
- கீழடி அகழ்வைப்பகம் அமைத்திட ரூ.12.21 கோடி ஒதுக்கீடு

- தொல்லியல்துறைக்கு ரூ.31.93 கோடி ஒதுக்கீடு
 
- உயர் கல்வித்துறைக்கு ரூ.5,052.84 கோடி ஒதுக்கீடு
 
- பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு

- 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு
 
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி
 
- தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு
 
- போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு
 
- நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு
 
- சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு
 
- பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு
 
- பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு
 
- மிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு

- வேளாண்மைத்துறைக்கு 11,894.48 கோடி 
ஒதுக்கீடு

- ரூ.550 கோடியில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடம் கண்டறியும் பணி

- செங்கல்பட்டு சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு
 
- தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு
 
- அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி
 
- சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு
 
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு
 
- நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு
 
- திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு
 
- வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன்
 
- ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி ஒதுக்கீடு

- விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு 4 லட்சமாக உயர்த்தப்படும்


- விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு
 
- நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு
 
- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு
 
- கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு
 
- வருவாய் பற்றாக்குறை மாநியமாக ரூ.4025 கோடி வழங்க 15வது நிதிக்குழு பரிந்துரை
 
- நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
 
- 1,12,876 தனி வீடுகள், 65,290 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்

- அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு

- ஆழ்கடல் மீனவர்களை தொடர்புகொள்ள இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்
 
- 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்
 
- அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் 

- தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்

- நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டம் செயல்படுத்தப்படும்

- பேரிடர் மேலாண்மைதுறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு
 
- சாலை பாதுகாப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
 
- ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும்
 
- நெடுஞ்சாலைதுறை சாலை பாதுகாப்பிற்கு தனி பிரிவு உருவாக்கப்படும் 
 
- நிதி நிர்வாகத்திற்கு ரூ.1,403.17 கோடி நிதி ஒதிக்கீடு 
 
- ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்
 
- சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ரூ.100 கோடி மானியம்
 
- கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு

- மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.563 கோடியில் சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 
 
- மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.298 கோடி ஒதுக்கீடு 

- தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் 
 
- அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வலாகம் 49,000 கோடி செலவில் அமைக்கப்படும்  
 
- எல்.ஐ.சி-யுடன் இணைந்து வருமை கோட்டிட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயனடைய புது திட்டம் 
 
- பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு முறை 
 
- சேலம் மாவட்டம் புத்திரகவுண்டர்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் அமைப்படும்

- ரூ.610 கோடி செலவில் 37 அணைகள் புனரமைப்பு செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு
 
- ரூ.2962 கோடி செலவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்

- 37 மாவட்டங்களில் உள்ள தலா 2 வட்டாரங்களில் ரூ.37 லட்சம் செலவில் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்
 
- படிப்புக்கு தேவையான பொருட்களை விலையின்றி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1018.39 கோடி ஒதுக்கீடு
 
- தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் 

மீன்பிடி தடை காலத்தில் உதவித் தொகை வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு ரூ.298 கோடி நிதி ஒதுக்கீடு
 
- கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
 
- நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 53 ஏக்கரில் ரூ.77.94 கோடியில் மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல்
 
- முதல்வரின் கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என 5 ஆண்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும் 
 
- 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு

- முதல்வர் பசுமைவீடுகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

- பூச்சி மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு 
 
- உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும்
 
- பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,863 கோடி ஒதுக்கீடு 

- சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

- மீன்வளத்துறைக்கு ரூ.1,229.85 கோடி ஒதுக்கீடு

- கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முகமூடி, 3 அடுக்க முகமூடிகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளது
 
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1033 கோடி ஒதுக்கீடு
 
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

- தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் 6 பெட்ரோல் நிறுவனங்கள்

- புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
 
- கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கப்படும்
 
- தமிழ்நாட்டின் மாநில குடும்பத் தரவு திட்டத்தை செயல்படுத்த ரூ.47.50 கோடி ஒதுக்கீடு
 
- சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு
 
- சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்திற்கு 295 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்
 
- கோவில்களுக்கு சொந்தமான 7233 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன
 
- அரசு ஊழியர்களுக்கு சென்னை தாண்டர் நகரில் ரூ.76 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு

- மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு
 
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு
 
- அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு ரூ.253.14 கோடி ஒதுக்கீடு
 
- பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது
 
- ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு
 
- ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கான நிதியில் கல்வித் திட்டங்களுக்காக ரூ.2,018.24 கோடி ஒதுக்கீடு

- இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் விரைவில் தொடங்கும்

- அத்திக்கடவு-அவிநாசி நீர்ப்பாசன திட்டம் ரூ.500 கோடி

-  நெல்லையில் உணவு பூங்கா திட்டத்திற்காக ரூ. 77.94 கோடி

- ஏழை குடும்பங்களுக்கு எல்.ஐ.சியுடன் இணைந்து இலவச விபத்து காப்பீடு