புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (17:46 IST)

தாக்குதல் எல்லையை விரிவுப்படுத்தியுள்ளார் நிர்மலா சீதாராமன்; சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

பொருளாதாரம் தாண்டி தனது தாக்குதல் எல்லையை நிர்மலா சீதாராமன் விரிவுப்படுத்தியுள்ளார் என சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் 2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிக நீண்ட நெடிய உரையை அவர் நிகழ்த்தினார்.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் “பொருளாதாரம் தாண்டி வரலாறு, பண்பாடு, என்று தன் தாக்குதல் எல்லையை நிர்மலா சீதாராமன் விரிவுப்படுத்தியுள்ளார்” என கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது, தமிழகத்தை சேர்ந்த எதிர்கட்சியினர் ”கீழடி” என கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.