புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (15:42 IST)

எல்லாமே வெறும் பேச்சு தான்; பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை குறித்து பேசிய ராகுல் காந்தி, “இது நெடிய உரையாக அமைந்திருந்தாலும் எல்லாம் வெறும் பேச்சு தான்” என விமர்சித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பட்ஜெட் உரையில் நீண்ட நேரம் பேசினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, ”வேலை வாய்ப்பின்மை என்பது நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சனையாகும். ஆனால் இதனை தீர்ப்பதற்கு பட்ஜெட்டில் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லை” என விமர்சித்துள்ளார்.

மேலும், “பட்ஜெட் வரலாற்றில் நீண்ட நேர உரையாக அமைந்திருந்தாலும், எல்லாமே வெற்றுப் பேச்சு தான்” எனவும் சாடியுள்ளார்.