நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனமழை காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மையம் இன்று இலங்கை அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக நாளை அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட வருவாய் அலுவலர் ப சிதம்பரம் அவர்கள் அறிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் திருவாரூரில் உள்ள கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran