செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 ஜனவரி 2023 (07:47 IST)

ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை; மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

Holiday
நாளை ஜனவரி 26 குடியரசு தின விடுமுறை என்ற நிலையில் ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 
 
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் செய்து வருகிறது.
 
இந்த நிலையில் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார். 
 
இந்த விடுமுறையை ஈடுகட்ட வேறொரு நாள் அலுவலக நாளாக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva