1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஜூலை 2020 (11:56 IST)

திருப்போரூர் எம்எல்ஏ விரைவில் கைது செய்யப்படுவார்: செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பேட்டி

திருப்போரூர் எம்எல்ஏ விரைவில் கைது செய்யப்படுவார்
நிலத்தகராறு காரணமாக திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் தரப்பிற்கும், குமார் என்பவரின் தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதில் இதயவர்மனின் தந்தை லக்ஷ்மிபதி , குருநாதன், மனோகரன் ஆகிய மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ இதயவர்மன் காரில் சென்ற குமாரை துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அந்த துப்பாக்கி குண்டு அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தையூர் கோமா நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசனின் மீது பாய்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
 
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், இந்த கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார்