திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (18:20 IST)

ரூ.3,688 கோடி கடன் மோசடி செய்துள்ள பிரபல தனியார் நிறுவனம் !

ரூ.3.688 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக RBI யிடம் பஞ்சாப் நேசனல் வங்கி புகார் அளித்துள்ளது.

இந்நிலையில்,  நாட்டின் தலைநகரான புதுதில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்  பஞ்சாப் நேசனல் பேங்க் பல்வேறு பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் கடன் கொடுத்துள்ளது.

இந்நிலையில்ட், சில வருடங்களுக்கு முன்  வைர வியாபாரி  நீரவ் மோடி ரூ.  11, 300 கோடியை கடன் பெற்று மோசடி செய்த நிலையில் அவர்  தற்போது சிறையி கம்பி எண்ணி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2109 ஆம் ஆண்டு பூஷன் பவர் மற்றும்ஸ்டீல் நிறுவனம் ஒன்று ரூ.3,800 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து,  நான்காவது பெரிய மோசடியாக பிரபல டி.ஹெ.எப்.எல் எனப்படும் திவான்  ஹவுசிங் பைபான்ஸ் நிறுவனம்  ( வீடு கட்ட கடன் வழங்கும் நிறுவனம் ) சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கடன்களை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம் பஞ்சாப் நேசனல் பாங்கின் தலைமை வங்கியான தில்லியில் ரூ.3,688 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக இவ்வங்கி RBI யிடம் புகார் அளித்துள்ளது. அத்துடன் டி.ஹெச்.எப்.எல் வங்கி மீது யூனியன் வங்கி மற்றும் எஸ்.பிஐயும் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.