செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (11:03 IST)

ஸ்டாம்ப் முதல் ஆபிஸ் வரை எல்லாம் ரெடி! – போலி பேங்க் தொடங்கிய நபர்கள் கைது!

பாரத ஸ்டேட் வங்கி பெயரில் போலி வங்கி தொடங்க முயன்ற நபர்களை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் கமல்பாபு. இவரது பெற்றோர் வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். தன்னை எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் என கூறிக்கொண்ட இவர் பண்ருட்டி வடக்கு பஜார் எஸ்பிஐ வங்கி கிளை என்ற பெயரில் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும் வடக்கு பஜார் கிளை பெயரில் ரப்பர் ஸ்டாம்பு, பணம் எடுக்கும் மற்றும் செலுத்தும் படிவம் ஆகியவற்றையும் தயார் செய்துள்ளார்.

இதுகுறித்து பண்ருட்டி ஸ்டேட் பேங்க் மேனேஜர் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் கமல்பாபுவின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட எஸ்பிஐ படிவங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். எஸ்பிஐ வங்கியின் பெயரில் போலியாக ஒரு வங்கி தொடங்கி மோசடி செய்ய கமல்பாபு முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உடந்தையாக இருந்த ரப்பர் ஸ்டாம்ப் கடை உரிமையாளர் மாணிக்கம் மற்றும் படிவங்களை ப்ரிண்ட் அடித்து கொடுத்த குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.