1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thunderstorms for the next 2 hours!Weather Center

அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் மழை ! வானிலை மையம்

Thunderstorms
தமிழகத்தில் அடுத்த இரண்டு மணிநேரத்தில் மழை நேரத்திற்கு இடியுடன் மழை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது..

இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி, மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக செனை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!