1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (17:12 IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் உள்பட பல ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக சமீபத்தில் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்பவர் தான் நடத்தி வந்த பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது முதுகுளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிக்கு அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. தனக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மேலும் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளதை அடுத்து அந்த ஆதாரத்தின் அடிப்படையில் அறிவியல் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் பள்ளி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது