ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 21 நவம்பர் 2020 (17:38 IST)

தினமும் 12 மணிநேரம் வேலைநேரமாக்க மத்திய அரசு திட்டம்!!

நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை தினமும் 12 மணிநேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே 12 மணிநேரத்திற்கு மேலும்,   12 மணிநேரமாக இருந்த பணிநேரத்தை காரல்மார்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வற்புறுத்தி உலகம் எங்கிலும் 8 மணிநேரமாகக் கொண்டு வந்து பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைத்தனர்.

இந்நிலையில் சில இடங்களில் 8 மணிநேரம் என்பது ஒரு ஷிப்ட் ஆகவும் கூடுதலாக  4மணிநேரம் வேலை செய்தால் அது அரை ஷிப்ட்டாக கருதப்படும். திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் இந்தவேலை நேரம்  அமலில் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை தினமும் 12 மணிநேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதற்கு தொழிற்சங்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளது.