தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி பெரிய அளவில் சாதித்து காட்டியது எம்ஜிஆர் மட்டுமே. அவர் மட்டுமே மூன்றுமுறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். அவருக்கு பின் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் வரை சென்றார். அவ்வளவுதான்.. இதற்கிடையில் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் உள்ளிட்ட பலரும் அரசியல் கட்சி தொடங்கினார்கள். ஆனால் யாருக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்துவிட்டு அதன் பின் வாங்கினார்....