1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dindigul leoni talk about sengottaiyan

காலம் போன காலத்தில்!.. செங்கோட்டையனை நக்கலடித்த ஐ.லியோனி!...

sengottaiyan
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளுக்குதான் அரசியல் ரீதியாக போட்டி இருந்து வருகிறது. மற்ற கட்சிகள் இருந்தாலும் அவை அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்து வருகின்றன. அதே நேரம் தற்போது புதிதாக வந்துள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தியாக பார்க்கப்படுகிறது. விஜய் ஒரு நட்சத்திர நடிகர் என்பதால் அவர் கணிசமான வாக்குகளை 2026 சட்டமன்ற தேர்தலில் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

இதை பல அரசியல் பிரபலங்களும் சொல்லி வருகிறார்கள். ஒருபக்கம் அதிமுகவிலிருந்து தற்போது தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் ‘விஜயை முதலமைச்சராகாமல் ஓய மாட்டன்’ எனக் கூறியிருந்தார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இதை கிண்டலடித்திருந்தார். ‘விஜயை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என்பது தெரியவில்லை.. தமிழ்நாட்டில் இது நடக்காது’ என கூறியிருந்தார்..

இந்நிலையில், திமுக ஆதரவாளர் திண்டுக்கல் லியோனி செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் சொன்னது பற்றி கருத்து தெரிவித்தபோது ‘அது அவருடைய ஆசை.. காலம் போன கடைசியில் அவருக்கு இப்படி ஒரு ஆசை வந்திருக்கு.. அத சொல்றதுல ஒன்னும் தப்பு இல்ல.. ஆனால் மக்கள் எப்படி அதை பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.. கழுதை தெரிந்து கட்டெரும்பு ஆன கதைதான் அந்த கட்சி.. திமுகவுக்கு தவெக ஒரு பொருட்டே இல்லை.. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது’ என்று அவர் கூறியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுகவை ஜெயிக்க உங்ககிட்ட என்ன பிளான் இருக்கு?.. பாஜகவிடம் எகிறிய அண்ணாமலை!..