1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Three more person says teeth attacked by asp balbirsingh

பல் பிடுங்கிய விவகாரம்.. மேலும் 3 பேரின் பல் பிடுங்கியதாக புகார்..!

பல்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதி ஒருவரின் பல்லை காவல்துறையினர் பிடுங்கியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியின் ஏஎஸ பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இது குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் 3 பேர் தங்களுடைய பற்களையும் பிடுங்கப்பட்டதாக புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பாப்பாங்குடி காவல் நிலையத்தில் விசாரணை கைதி பல் பிடுங்கியதாக குற்றச்சாட்டு ஏற்பட்டதை அடுத்து ஏஎஸ்பி பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வேர்சிங் தன்னுடைய பற்களையும் பிடுங்கியதாக மேலும் 3 இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர் 
 
தங்களுடைய பற்களை பிடுங்கி தாக்கியதாகவும் ரத்த வந்த நிலையில் கூட பற்களில் மிளகாய் பொடியை கொட்டியதாகவும் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்பீர் சிங் பெரும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கஞ்சா விற்பனையும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரிப்பு- டிடிவி. தினகரன்