திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (12:04 IST)

பல்க் மெசேஜ் சேவை வழங்கும் 120 ஐடிக்களை ப்ளாக் செய்தது மத்திய அரசு: சீனாவுடன் தொடர்பா?

bulk message
பல்க் மெசேஜ் சேவை வழங்கும் 120 ஐடிக்களை மத்திய அரசு பிளாக் செய்து உள்ள நிலையில் இந்த நிறுவனத்திற்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வாடிக்கையாளர்களுக்கு பல்க் மெசேஜ் அனுப்பும் சேவையை செய்து வரும் சில நிறுவனங்கள் சீன ஹேக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக கூறப்பட்டதால் அவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது. 
 
உள்துறை அமைச்சகம் இது குறித்து கடந்த இரண்டு மாதங்களாக கண்காணித்து வந்த நிலையில் அதன்மூலம் கிடைத்த தகவலின்படி கடந்த இரண்டு மாதங்களில் 120 ஐடிக்களை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த ஐடிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்க் மெசேஜ் அனுப்பப்படுவதும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 
 
பல்க் மெசேஜ் செல்லும் ஐபி முகவரிகள் அனைத்துமே சீனாவை சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மேற்கு வந்த மேற்குவங்க மின்வாரியத்தின் பல்க் மெசேஜ் ஹேக்கிங் செய்யப்பட்டு அதில் வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணம் நிலுவையில்  இருப்பதாகவும் அதனை உடனே செலுத்த வேண்டும் என்று புதிய லிங்க் அமைத்துக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்ததாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva