மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் தொடங்கியது. ஆரம்பம் முதலே முதல் நிலை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேநேரம் 5 மாதங்களுக்கு முன்புதானே வாக்கு செலுத்தினோம்.. மீண்டும் ஒரு தேர்தலா என்கிற சலிப்பு பலரிடமும் காணப்பட்டது
இதன் காரணமாக 2024 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்பிடும்போது இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் குறைவான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது..
இன்று மாலை ஆறு மணிக்கு இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மதுராந்தகம் தொகுதியில் 6 மணி நிலவரப்படி 85.88 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதே தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடந்த போது 93.36 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
அதேபோல் மாலை ஆறு மணி நிலவரப்படி தாராபுரம் தொகுதியில் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதே தொகுதியில் ஏப்ரலில் நடந்த தேர்தலில் 89.96 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதைப்பார்க்கும் போது 5 மாதங்களில் மீண்டும் தேர்தல் வந்ததால் குறிப்பிட்ட சதவீதம் பேர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்றே பார்க்கப்படுகிறது. இன்று பதிவான வாக்குகள் வருகிற 9ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.