1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (22:22 IST)

ரஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை.. 15 கிமீ.,உயரம் எழும்பிய சாம்பல்

russia volcano
ரஷியாவில் உள்ள ஷிவேலுச் என்ற எரிமலை வெடித்துச் சிதறியதில் சுமார் 10 கிமீட்டர்  உயரத்திற்கு சாம்பல் எழுப்பியுள்ளது.

ரஷியா நாட்டில் அதிபர்  புதின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிரது,.  தற்போது, உக்ரைன் நாட்டின் மீது அவரது உத்தரவின்படி போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் கம்சாட்ஸ்க் என்ற தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச்  என்ற எரிமலை இன்று வெடித்துச் சிதறியுள்ளது. இத்ல், சுமார் 10 கிமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது.

அத்துடன், 15 கிமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் வெடிப்புகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனனர் அதிகாரிகள்.

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக விமான போக்குவரத்து குறியீடு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந் மக்களை பாதுகாப்பக வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி கூறியுள்ளனர். அதேபோல், பள்ளிகள் மூடவும் உத்தரவிட்டுள்ளனர்.