செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (16:02 IST)

கஞ்சா விற்பனையும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரிப்பு- டிடிவி. தினகரன்

dinakaran
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் காவல்துறையினர் அதிரடியாக சோதனயில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ஒரே நாளில் பத்து மருத்துவர்கள் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து 10 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில்  பல  போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊட்கங்களில் செய்திகள் வெளியாகியுள்ள  நிலையில், இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்றே கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குகள் பதிவு செய்து 70க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் இரண்டு ஆபரேஷன்களை போலீசார் மேற்கொண்ட போதும் இன்னும் கூட கஞ்சா விற்பனையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

எனவே இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.