1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. amutha ias investigate in teeth picked issue

பல் பிடுங்கிய விவகாரம்: யாரும் விசாரணையில் ஆஜராகவில்லை என தகவல்..!

அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதியாக இருந்த ஒருவரை பல் பிடுங்கிதாக காவல்துறையை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் இன்று அவர் அம்பாசமுத்திரத்திற்கு சென்று இது குறித்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கிய விவகாரத்தில் முதல் நாள் விசாரணையில் யாரும் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியானது.
 
இதனை அடுத்து முதல் நாள் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் விசாரணை நடத்தும் அதிகாரி அமுதா  ஐஏஎஸ் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நெல்லை புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை இரண்டாவது நாளில் ஆஜர் ஆவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி..!