1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Three more days rain in tamil nadu

மீண்டும் 3 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

rain
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே இன்று கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையை பொறுத்தவரை இலேசான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை: அன்புமணி கோரிக்கை!