1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 28 டிசம்பர் 2022 (09:44 IST)

சென்னையில் பனிமூட்டம்.. பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

Flights
சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் இருந்து வரும் நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அதிக பனிமூட்டம் இருந்ததால் சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் பனி மூட்டம் அதிகமாகி வருவதை அடுத்து ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சில விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் சென்னை விமான நிலைய பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பி சென்றதாகவும் சில விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 கத்தாரில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது என்றும், கோவை பெங்களூர் ஆகிய பகுதியில் இருந்து வந்த விமானங்கள் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு திரும்பி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
Edited by Siva