1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (12:24 IST)

நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல: ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசர்!

இன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று காங்கிரஸ் கட்சி திருநாவுக்கரசர் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சி பிரமுகர் திருநாவுக்கரசர் இன்று ரஜினியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி சார்ந்த சந்திப்பாக இது இருக்கலாம் என பலவாறாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமளித்துள்ளார் திருநாவுக்கரசர்.

ரஜினியுடனான சந்திப்பு குறித்து பேசிய அவர் தனது பேரனின் பிறந்தநாளில் ரஜினியை சந்தித்து ஆசிபெற அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சம்பவம் சாதரணமாய் முடிந்துவிட்டது.

எனினும் இருவரும் கட்சி மற்றும் அரசியல் குறித்து ஏதாவது பேசியிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.