ஆம் ஆத்மி போன்று அதிமுகவும் 3வது முறையாக ஆட்சி அமைக்குமா? திருமாவளவன்

thirumavalan
ஆம் ஆத்மி போன்று அதிமுகவும் 3வது முறையாக ஆட்சி அமைக்குமா
Last Modified புதன், 12 பிப்ரவரி 2020 (21:35 IST)
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை வரும் 16ஆம் தேதி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லியில் போன்றே தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என தலைவர்கள் இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த பிரசாந்த் கிஷோர், இம்முறை திமுகவை தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் உட்கார வைப்பார் என்று திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 3வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று அதிமுக கூறிய கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் ’பாஜகவோடு அதிமுக இணைந்து செயல்படும் வரை மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்பது அதிமுகவுக்கு கனவாகி போய்விடும் என்றும் பாஜக உடன் இணைந்து செயல்பட்டால் அவர்களுடைய கனவு நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பாஜகவுடன் இருந்து அதிமுக விலகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :