ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (09:51 IST)

ரஜினிக்கு தர்மபுரி எம்பி கூறிய குட்டிக்கதை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் ஒரு வருட களப்பணிக்கு பின் அடுத்த வருடம் மே மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பார் என்றும், இந்த தேர்தலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்றும் தமிழருவி மணியன் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியுடன் கூட்டணி வைக்கவிருப்பதை பாமக தலைவரும் மறுக்கவில்லை என்பதும் ஆனால் அதே நேரத்தில் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
 
இந்தநிலையில் தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குட்டிக் கதையை ரஜினிகாந்த் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராம்தாஸ் ஆகிய இருவருக்கும் கூறியுள்ளார். 2021ல் தமிழ்நாட்டில் இரண்டு பேர் மிகப்பெரிய அவமானகரமான தோல்வியை சந்திக்க போகிறார்கள். இந்த அவமரியாதையை உங்களுக்கு அளிக்கப் போவது அர்ஜுனர்-கிருஷ்ணர் என்று நீங்கள் நம்பும் இருவர்தான். டெல்லியில் செய்ததை விட மிக சிறப்பாக செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் 
 
ரஜினி கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிக்கும் மிகப்பெரிய தோல்வி 2021ல் கிடைக்கும் என்றும் தர்மபுரி எம்பி கூறியபடி நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்