செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (17:35 IST)

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு... கைதானவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் கூட்டாளி - ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு... கைதானவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு  வழக்கில் கைதனாவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் கூட்டாளி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில், சிபிசிஐடி போலீஸார் அய்யப்பன் என்பவரை கைது செய்துள்ளனர். 
 
ஏற்கனவே காங்கிரஸில் இருந்து திமுகவுக்கு சென்று, திமுக கட்சியின் பீரங்கியாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.ஒருவரின் கூட்டாளிதான் அய்யப்பன் என தெரிவித்துள்ளர்.
 
மேலும், திமுக ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனியா செடிகளை சுத்தம் செய்து வருகிறோம். எதிர்காலதில் தவறுகள் நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்டு வருகிறது  என தெரிவித்துள்ளர்.