1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalavan said about Rajini and pmk alliance

பல கனவுகளில் இதுவும் ஒன்று: ரஜினி-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்துவார் என்றும் செப்டம்பர் முதல் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார் என்றும் தமிழருவி மணியன் அவர்கள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்  ரஜினிகாந்த் தலைமையில் அமையும் கூட்டணியில் பாமக இணைந்து ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளார்
 
இந்த நிலையில் தமிழருவி மணியனின் இந்த கருத்து குறித்து பல்வேறு தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறியபோது ’தமிழருவி மணியன் அவர்கள் இதுவரை எத்தனையோ கனவுகள் கண்டுள்ளார். அவருடைய கனவு இதுவரை எதுவுமே பலித்ததில்லை. இப்போதும் அவர் கண்டுள்ள கனவுகளில் ஒன்றாக தான் இதனை நாங்கள் பார்க்கிறோம். இந்த கனவு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
ரஜினி கட்சி, பாமக, தேமுதிக, மதிமுக, தமாக போன்ற கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடும் என்றும், திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அதிமுக, பாஜக, கூட்டணி கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத கனமழை: காட்டுத் தீ பிரச்சனைக்கு முடிவு