செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (16:00 IST)

பாஜகவிற்கு செல்கிறாரா விஜய்? கேஎஸ் அழகிரி அதிர்ச்சி தகவல்

தளபதி விஜய் வீட்டில் கடந்த இரண்டு வாரம் திடீரென வருமானவரித் துறையினர் ரெய்டு செய்தனர் என்பதும், இரண்டு நாட்கள் அவருடைய வீட்டில் நடந்த ரெய்டில் எந்தவிதமான முறைகேடான பணமும் கைப்பற்றப் படவில்லை என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டதும் தெரிந்ததே.
 
இருப்பினும் விஜய்க்கு சொந்தமான ரூபாய் 1200 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை கண்டுபிடித்து இருப்பதாகவும் அதை வைத்து விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் பயமுறுத்தியதாகவும் ஒரு வதந்தி ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்த சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் விஜய் பாஜகவில் இணைய வேண்டும் என்றும் மறைமுகமாக மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் பாஜக நிபந்தனை விதித்துவருவதாகவும் ஒரு சில ஊடகங்கள் வதந்திகளை பரப்பி வருகின்றன. 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விஜய்க்கு ஆதரவாக ஒரு நீண்ட அறிக்கை விட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கேஎஸ் அழகிரி தற்போது திடீரென பல்டி அடித்துள்ளார். விஜய்க்கு பாஜக குறி வைத்துள்ளதாகவும், பாஜகவில் ரஜினி விழுந்ததுபோல் விஜய்யும் விழுவாரா? என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக விஜய் செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்