1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (19:55 IST)

ரஜினி குறித்து பேச தமிழருவி மணியன் யார்? எச்.ராஜா கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்ட் மாதம் பொதுக் கூட்டம் நடத்துவார் என்றும், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் என்றும், இன்று காலை தமிழருவி மணியன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் தமிழருவி மணியன் பேச்சு குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள், ‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசுவதற்கு தமிழருவி மணியன் யார்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதுமட்டுமன்றி விஜய் எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்
 
ரஜினி, விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது